தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எலான் மஸ்க் இஸ்ரோவுக்கு வாழ்த்து

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
எலான் மஸ்க்
Updated On :15 ஜூலை 2021, 9:22 am

DIN

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், விகாஸ் என்ஜினின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான எலான் மஸ்க், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் என்ஜின் சோதனை 3-வது முறையாக மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 240 விநாடி (4 நிமிடம்) மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ நேற்று தெரிவித்தது.

உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மஸ்க், மனிதர்களை பிற கிரகங்களில் அமர வைப்பதை லட்சியமாக கொண்டவர். போட்டியாளராக இருந்தபோதிலும், பல சமயங்களில் மஸ்க் இஸ்ரோவை வெகுவாக பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.