அடுத்தடுத்து காணாமல் போகும் ரஷிய விமானங்கள்: ஒரே மாதத்தில் 2ஆவது விமானம் மாயம்
ரஷியாவில் 13 பேருடன் சென்ற விமானம் சைபீரியாவில் மாயமானதைத் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ரஷியாவில் 13 பேருடன் சென்ற விமானம் சைபீரியாவில் மாயமானதைத் தொடர்ந்து விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரஷியாவில் கடந்த 6ஆம் தேதி பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி புறப்பட்டஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம் லானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக ரேடாா் பாா்வையிலிருந்தும் மறைந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் விமானம் விபத்துள்ளானது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டாவது விமானம் தற்போது மாயமாகியுள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
13 பேருடன் சைபீரியாவிற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் மாயமானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மாயமான விமானத்தைத் தொடர்ந்து தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...