திடீர் வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.


சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வானிலை மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 3 நாள்களில் மட்டும் 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் வெள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான போக்குவரத்து சேவைகளான மெட்ரோ ரயில்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
வழக்கமான மழை அளவைக் காட்டிலும் 5 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...