பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயம்
பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.


பெரு நாட்டின் பியூரா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் வரை காயமடைந்ததாக அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதி 36 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது .
இதையும் படிக்க | பல் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்று இளைஞன் தற்கொலை
சுல்லெனா பகுதியில் நிலநடுக்கத்தின் காரணமாக 38 பேர் வரை காயம் அடைந்ததாகவும் , இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதோடு சில கட்டடங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...