நைஜீரியாவை பாராட்டிய டிரம்ப்: காரணம் என்ன?
நைஜீரியாவில் சுட்டுரை நிறுவனத்தைதடை செய்ததற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


நைஜீரியாவில் சுட்டுரை நிறுவனத்தை தடை செய்ததற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் சுட்டுரைக் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவொன்றை சுட்டுரை நிறுவனம் நீக்கியது. தங்கள் நிறுவன விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டுரை நிறுவனம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து தங்களது நாட்டில் சுட்டுரை நிறுவனம் தடை செய்யப்படுவதாக நைஜீரிய அரசு அறிவித்தது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டிவிட்டர் மற்றும் முகநூல் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக டொனால்ட் டிரம்பின் சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...