வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.34 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27.22 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆண்டு இதே மாதத்தில் உலகையே அச்சுறுத்த தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 12,34,37,233 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 27,22,111 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,94,21,615 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,12,93,507 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,073 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,04,82,127 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்து 54 ஆயிரத்து 871-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 55,908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 792 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,15,99,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,59,755 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,19,50,459 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 73,450 பேருக்கு தொற்று பாதிப்பும், 2,331 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 292,856 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 197,827 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த தில்லி இளைஞா்

அரபிக்கடல் மீன்பிடி விசைப்படகுகளை பதிவு செய்ய நடவடிக்கை: ஆட்சியா்

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: அவிநாசி, பல்லடத்தில் அதிகாரிகள் ஆய்வு

கைத்தறி தின சிறப்பு கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் தொடக்கம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



