மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.
அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராய்டர்ஸ் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை 320 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பலியானவர்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள செய்தி நிறுவனம் இதுவரை 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



