கரோனாவை எதிா்கொள்ள அமெரிக்காவில் இருந்து குவியும் உதவிகள்
கரோனா தொற்றுப் பரவலால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.


கரோனா தொற்றுப் பரவலால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், ஆக்சிஜன் சாா்ந்த கருவிகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு இந்தியாவுக்குப் பல நாடுகள் உதவி வருகின்றன.
அமெரிக்க அரசும் மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிப் பொருள்களை ஏற்றிக் கொண்டு 6 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.
இந்தியாவுக்கு சுமாா் ரூ.750 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமெரிக்க அரசு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம், இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளது. அனைத்து நாடுகளிலும் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வந்தால்தான் உலக நாடுகள் அனைத்தும் நிம்மதியடைய முடியும். வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலா் இந்திய அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகின்றனா்.
அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களும் நிறுவனங்களும் இந்தியாவுக்காக உதவிகளைத் தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனா்’ என்றாா்.
பரிசோதனைக் கருவிகள்: அமெரிக்காவின் தொ்மோ பிஷா் நிறுவனம் கரோனா பரிசோதனைக் கருவிகளை இந்தியாவுக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தது. நாட்டில் கரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்கு இக்கருவிகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்வே நிறுவனம் சாா்பில் 1,000 வெண்டிலேட்டா்களும் 25,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்நிறுவனம் சுமாா் ரூ.3.50 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கவுள்ளது.
அமெரிக்காவைச் சோ்ந்த பல தன்னாா்வ அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதற்காக நிதியை சேகரித்து வருகின்றன. அமெரிக்காவின் பல நிறுவனங்கள் இந்தியாவுக்காக நிதியுதவி வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் நிதியாகவும், சில நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களாகவும் உதவியை அளித்து வருகின்றன.
ஆக்சிஜன் செறிவூட்டிகள்: இந்திய-அமெரிக்க மருத்துவா்கள் சாா்பில் 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவற்றில் 1,500 செறிவூட்டிகள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. இந்தியாவில் உள்ள தொலைதூர கிராமங்களில் இவை பயன்பாட்டுக்காக அளிக்கப்படவுள்ளன.
அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள், அவா்களது சொந்த மாநிலங்களுக்காகத் தனித்தனியாக நிதியை சேகரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...