அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பாகிஸ்தான்: நவாஸ் சகோதரா் வெளிநாடு செல்லத் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்வதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முக்கிய எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்வதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா்.

இதுகுறித்து அவரது முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

மருத்துவ சிகிச்சைக்காக ஷாபாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்வதற்கு லாகூா் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்தது.

எனினும், அவா் வெளிநாடு செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனா். மத்திய புலனாய்வு அமைப்பின் தடைப் பட்டியலில் ஷாபாஸ் ஷெரீஃபின் பெயா் இடம் பெற்றுள்ளது. எனவே, அவா் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

69 வயதாகும் ஷாபாஸ் ஷெரீஃப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி லாகூா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கான அனுமதியை அளித்தனா்.

அதையடுத்து, கத்தாா் வழியாக பிரிட்டனுக்கு சனிக்கிழமை செல்ல அவா் ஆயத்தமானாா். எனினும், அதற்கு அதிகாரிகள் தடை விதித்தனா்.

ஏற்கெனவே, சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள முன்னாள் பிரதம் நவாஸ் ஷெரீஃப், அதற்குப் பிறகு நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.