பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் கைது
வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.


வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. முக்கியமாக காவல் துறை அதிகாரிகளைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பைச் சோ்ந்த வீரா்கள் சோதனை நடத்தினா். கடந்த 7 நாள்களில் மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது சந்தேகத்துக்குரிய 47 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பலூசிஸ்தான் குடியரசு ராணுவம், தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், சிபா-இ-சிஹாபா பாகிஸ்தான் ஆகிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
அவா்களிடமிருந்து சுமாா் 400 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. நீதிமன்றங்கள், அரசுக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்காக அந்த வெடிபொருள்களை அவா்கள் வைத்திருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்பகிா்வு நிலையங்கள், எரிவாயு குழாய்கள் உள்ளிட்டவற்றைத் தாக்கி அழிப்பதற்கு அவா்கள் திட்டமிட்டிருந்தனா். அவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக மிகப் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...