நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து: 45 பேர் பலி

பல்கேரியா நாட்டில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.

News image

பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து: 45 பேர் பலி

Updated On :23 நவம்பர் 2021, 10:27 am

DIN

பல்கேரியா நாட்டில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.

பல்கேரியாவில் பயணிகள் பேருந்தானது துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததாகத் தெரிகிறது.

சூழலை உணர்வதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்த நிலையில் பயணிகள் 45 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீப்பிடித்ததன் காரணமாக பேருந்து தடுப்புகளில் மோதியதா அல்லது தடுப்புகளில் மோதியதால் தீ பிடித்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.