அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆப்கன் மசூதியில் குண்டுவெடித்ததில் 50 பேர் பலி

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காரி சையத் கோஸ்ட் இதை உறுதி செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 அக்டோபர் 2021, 12:31 pm

DIN

ஆப்கானிஸ்தான் குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 50 பேர் பலியாகினர். ஆகஸ்ட் மாதல், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து நடைபெறும் மிகப் பெரிய வன்முறை இதுவாகும்.

டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற அரசு சாரா அமைப்பில் பணிபுரிந்து வரும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், "குண்டுவெடிப்பில் காயமடைந்த 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக வந்துள்ளனர். உயிரிழந்த 15க்கும் மேற்பட்டோரின் உடல்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. சிகிச்சைக்காக பலர் வந்து கொண்டே இருக்கின்றனர்" என்றார்.

குண்டுஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்துள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு தலிபான் அமைப்பின் எதிரி அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த காலத்தில் பொறுப்பேற்றிருந்தது. வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உள்ளூர் வணிகர் ஜல்மை அலோக்ஸாய் கூறுகையில், "40க்கும் மேற்பட்ட இறந்த உடல்களை கண்டோம். மருத்துவ அவசர ஊர்தி உடல்களை மீட்க சென்று கொண்டிருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் கொள்ளப்படுவதாக டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பில் பணியாற்றிவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மருத்துவமனையின் பிரதான வாயிலில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி தங்கள் உறவினர்களுக்காக அழுகிறார்கள். ஆனால், ஆயுதமேந்திய தலிபான்கள் மற்றொரு குண்டுவெடிப்பு நடக்காமல் தடுக்க கூட்டங்களை கலைக்க முயற்சி செய்கிறார்கள்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.