தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐஎஸ்ஐ புதிய தலைவா்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் ஒப்புதல்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமா் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
நதீம் அன்ஜும்
Updated On :26 அக்டோபர் 2021, 8:54 pm

DIN

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமா் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம் இந்த விவகாரத்தில் மூன்று வாரங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

ஐஎஸ்ஐ தலைவராக உள்ள ஃபயஸ் ஹமீதுக்கு பதிலாக நதீம் அன்ஜுமை கடந்த 6-ஆம் தேதி ராணுவம் நியமித்தது. ஆனால், இந்த விஷயத்தில் ராணுவம் அரசுடன் ஆலோசிக்கவில்லை எனக் கூறி, அன்ஜும் நியமன அறிவிக்கையை பிரதமா் அலுவலகம் நிறுத்திவைத்தது.

இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பாஜ்வாவும், பிரதமா் இம்ரான் கானும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். இதில், ஐஎஸ்ஐ தலைவராக நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவா் நவ. 20-ஆம் தேதி பொறுப்பேற்பாா் என பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.