சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

காலநிலை மாற்றத்திற்கு எதிரான முதலீட்டில் 9ஆவது இடத்தில் இந்தியா

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தொழில்நுட்பத்திற்கான முதலீடுகளை மேற்கொண்ட முன்னணி 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 அக்டோபர் 2021, 12:31 pm

DIN

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தொழில்நுட்பத்திற்கான முதலீடுகளை மேற்கொண்ட முன்னணி 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

காலநிலை மாற்றம் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மரபுசார் எரிபொருள் தேவையைக் குறைத்து காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் முயன்று வருகின்றன. 

எனினும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு உலக நாடுகள் திரும்புவது ஒப்பீட்டளவில் மிகக்குறைவாகவே உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. 

இதில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா 4800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து 1860 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் 580 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் மூன்றாவது இடத்திலும், பிரிட்டன் 430 கோடி முதலீட்டுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. மாற்று எரிசக்தி உற்பத்தியை நோக்கி உலகம் நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடுத்தபடியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.