வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உலகளவில் 300 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
உலகளவில் 300 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :28 அக்டோபர் 2021, 10:12 am

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்து நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு தவணையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 300 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாக தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 38.6 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4.48 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.44லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.45 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.9 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நேற்று(அக்-27) நிலவரப்படி 688 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 241.9 கோடி ,

இந்தியா - 104.15 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 71 கோடி

அமெரிக்கா - 42.28 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.