ரஷியாவில் புதிதாக 18,780 பேருக்கு கரோனா
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,780 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,780 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவின் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. புதிதாக 18,780 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 69,93,954 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மாஸ்கோவில் 1,549 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பீட்டர்ஸ்பெர்கில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 796 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். மேலும் 18,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...