மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கன் எல்லை பகுதியில் தற்கொலை படை தாக்குதல்: பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள மியான் குந்தியை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 செப்டம்பர் 2021, 8:08 am

DIN

தென்மேற்கு பாகிஸ்தானுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி குண்டு வெடிக்கவைத்ததில் பாகிஸ்தான் துணை ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி அருகே உள்ள மியான் குந்தியில் எல்லைப்புற காவலர்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குதான், ஹசாரா ஷியா பிரிவு வணிகர்கள் காய்கறிகளை விற்றுவருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர் என காவல்துறை துணை ஆய்வாளர் அசார் அக்ரம் ஏஎப்பி செய்திநிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை பயங்கரவாத எதிர்ப்புத் படையின் செய்தித் தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். பலுசிஸ்தானில் தீவிர சன்னி இஸ்லாமிய குழுக்களால் ஷியா பிரிவுச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றனர். பலுசிஸ்தானுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் எல்லைக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திவருவது அங்கு தொடர் கதையாகிவருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.