ரஷியாவில் குறைந்த கரோனா பாதிப்பு; அதிகரித்த பலி எண்ணிக்கை
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,425 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 70,47,880 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் கடந்த இரு மாதங்களில்(ஜூன் 22 முதல்) இதுவே மிகக்குறைந்த பாதிப்பாகும்.
மேலும் 795 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,88,785 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரஷியாவில் கரோனா பலி 790 ஆக இருந்தது.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,187 பேர் உள்பட இதுவரை 15,78,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 5,56,845 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 17,243 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,02,250 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் இதுவரை 3.8 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | நீட் மூலம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக: பிரியங்கா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...