தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமெரிக்கா : கரோனாவால் 4 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவில்  கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
அமெரிக்கா : கரோனாவால் 4 கோடி பேர் பாதிப்பு
Updated On :7 செப்டம்பர் 2021, 5:24 am

DIN

அமெரிக்காவில்  கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில்  இதுவரை 4 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . இதன் மூலம் உலகில் அதிகம் தொற்று பாதித்த நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

நேற்று (செப்-6) நிலவரப்படி புதிதாக 60,000 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 4.03 கோடியாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,48,935 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும் அமெரிக்காவின் கலிபோர்னியா-44.21 லட்சம் , டெக்சாஸ் - 37.06 லட்சம் , புளோரிடா - 33.52 லட்சம் மற்றும் நியூயார்க் - 23.04 லட்சமாகவும் அதிகம் தொற்று பாதித்த மாகணங்களாக பதிவாகியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.