அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதையடுத்து முதல்முறையாக பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற இரதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பைடன் கூறிய நகைச்சுவையால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
அவருக்கும் இந்தியாவுக்குமான உறவு குறித்து பேசிய பைடன், 1972ஆம் ஆண்டு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்து பைடன் என பெயர் கொண்ட ஒருவர் தனக்கு கடிதம் எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர், 2013ஆம் ஆண்டு, அமெரிக்க துணை அதிபராக பதவி வகித்தபோது மும்பை வந்திருந்ததாகவும், அப்போது இந்தியாவில் தனக்கு உறவினர்கள் யாரெனும் உள்ளார்களா என சிலர் தன்னிடம் கேட்டதை அவர் நினைவு நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உறவினர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எனக்கு சரியாக தெரியவில்லை என்றே கூறினேன். ஆனால், 1972ஆம் ஆண்டு 29ஆவது வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பைடன் என்ற பெயர் கொண்ட ஒருவர் மும்பையிலிருந்து எனக்கு கடிதம் எழுதினார். ஆனால், அவரை பின்தொடரவில்லை.
அடுத்த நாள் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தியாவில் பைடன் என்ற பெயரில் ஐந்த பேர் உள்ளனர் என செய்தியாளர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்.
பின்னர், கிண்டலடிக்கும் விதமாக பேசிய பைடன், "கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டன் ஜார்ஜ் பைடன் என ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்தேன். அயர்லாந்தை பூர்விகமாக கொண்ட எனக்கு இதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால், இதை தற்செயலாகவும் விட்டுவிட கூடாது. நான் சொல்ல வரும் நகைச்சுவை என்ன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இறுதியாக, ஜார்ஜ் பைடன் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் எங்கிருக்கிறார் என என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எனவே, இந்த கூட்டத்தின் நோக்கமே அவரை கண்டிபிடிப்பதுதான்" என்றார்.
இதையடுத்து, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த மோடி, "பைடன் என்ற பெயரில் இருப்பவர்கள் குறித்து நீங்கள் பேசினீர்கள். இதை நீங்கள் முன்பே என்னிடம் குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே, இதுகுறித்து ஆவணங்களை கண்டுபிடிக்க முயற்சித்தேன். இப்போது, நான் சில ஆவணங்களுடன் வந்திருக்கிறேன். ஒருவேளை இந்த ஆவணங்கள் சில உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

