ரஷியா: புதிய உச்சத்தில் தினசரி கரோனா பலி
ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:


ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 808 போ் உயிரிழந்தனா். இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். முந்தைய நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாக 799 கரோனா பலி பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாவால் தங்கள் நாட்டில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்தது. அதன் காரணமாகவே தினசரி பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் 65,34,791 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,68,049 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...