பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாகிஸ்தானில்  இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - 400 பேர் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் மாநிலம் லாகூரில் கடந்த ஆக-14 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவை பதிவு செய்யச் சென்ற இளம்பெண்ணை அங்கிருந்த ஆண்கள் அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் சீண்டல்களை செய்தனர் 

News image
பாகிஸ்தானில்  இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - 400 பேர் மீது வழக்குப் பதிவு
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:18 am

DIN

பாகிஸ்தான் மாநிலம் லாகூரில் கடந்த ஆக-14 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவை பதிவு செய்யச் சென்ற இளம்பெண்ணை அங்கிருந்த ஆண்கள் அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து பாலியல் சீண்டல்களைச்  செய்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விழாவைப்   பதிவு செய்யச் சென்ற பெண்ணிற்கு நடந்த இந்தக்  கொடூரத்திற்கு  சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்ததோடு , குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்  , ' சுதந்திர தினமன்று விழாவை பதிவு செய்ய அங்கு சென்றிருந்தேன். திடீரெனெ அங்கிருந்த ஆண்கள் சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் . பின் பயத்தில் பக்கத்தில் இருந்த பூங்காவிற்குச் சென்றேன். துரத்திக்கொண்டு வந்தவர்கள் என் ஆடைகளைக் கிழித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி தூக்கிப்போட்டு விளையாடத் தொடங்கினர்.மேலும் என்னுடைய செல்போனையும் , 1.5 லட்சம் மதிப்புள்ள மோதிரத்தையும் பிடிங்கிக்கொண்டார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார். 

அதனால் அன்று அந்த பகுதியில் கூடியிருந்த 400 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.