தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் முற்றுகை: துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி 

அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை நோக்கி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.

News image

அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் .

Updated On :7 ஜனவரி 2021, 9:36 am IST


வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தை அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை நோக்கி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.

அப்போது நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர். 

அவர்கள் கலைந்து செல்லாததால் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வன்முறையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் பொறுப்பில் உள்ள தற்போதைய துணை அதிபர் மைக் பென்சிடம், அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை செல்லாது என அறிவிக்கும்படி டிரம்ப் வலியுறுத்தினார். எனினும் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்களின் முற்றுகை போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

நாடாளுமன்ற கட்டட முற்றுகை போராட்ட வன்முறையை அடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.