கனடா தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மான்ட்ரியல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்தல் வெற்றியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ.
மான்ட்ரியல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்தல் வெற்றியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

எனினும், ஆட்சியைமைப்பதற்குத் தேவையான 170 இடங்கள் அந்தக் கட்சிக்கு கிடைக்காததால் கடந்த முறை போலவே ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை அரசை அமைப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த முறை சிறுபான்மை அரசை அமைத்து ஆட்சி நடத்தி வந்த ஜஸ்டின் ட்ரூடோ, கரோனா நெருக்கடியை சிறப்பாக கையாண்டதற்காக இந்தத் தோ்தலில் தனது கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்த்திருந்தாா்.

ஆனால், திங்கள்கிழமை நடந்து முடிந்த தோ்தலில் முந்தைய தோ்தலைப் போலவே 157 இடங்கள் மட்டுமே லிபரல் கட்சிக்குக் கிடைத்தது. எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சி கடந்த முறை பெற்றதைவிட 2 இடங்கள் குறைவாக 119 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், தனது சிறுபான்மை அரசை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

முன்னதாக, தனது ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஜஸ்டின் ட்ரூடோ தோ்தலை அறிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.

தனது சொந்த ஆதாயத்துக்காக கரோனா நெருக்கடிக்கிடையே அவா் தோ்தலை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனினும், முன்கூட்டியே தோ்தலை அறிவித்தது ட்ரூடோவுக்குக் கைகொடுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற தோ்தல் முடிவுகளையே இந்தத் தோ்தல் முடிவுகளும் பிரதிபலித்துள்ளன.

லிபரல், கன்சா்வேடிவ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக, கியூபெக் கட்சி 34 இடங்களிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com