மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வில் ஸ்மித் கைது செய்யப்படுகிறாரா? திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ஆஸ்கர்

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மேடையில் தனது மனைவி குறித்து கேலியாக பேசியதற்கு அமெரிக்க நகைச்சுவை நடிகர் ராக்கை வில் ஸ்மித் அறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

News image
வில் ஸ்மித்
Updated On :1 ஏப்ரல் 2022, 6:25 am

DIN

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்ததை தொடர்ந்து, அவரை கைது செய்ய காவல்துறை தயாராக இருந்ததாக ஆஸ்கர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து முதல்முறையாக ஆஸ்கர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வில் பாக்கர் ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், காவல்துறையினர் வந்து ராக்கிடம் பேசும்போது நான் அவருடன் அமர்ந்திருந்தேன் என்றார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அவரை (வில் ஸிமித்) கைது செய்வோம் என அவர்கள் தெரிவித்தனர். இப்போதே அவரை கைது செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் புகார் அளித்தால் அவரை கைது செய்வோம். எங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை அவர்கள் பட்டியலிட்டனர். ஆனால், அந்த விருப்பங்களை ஏற்க கிரிஸ் ராக் மறுத்துவிட்டார். தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் எங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளை எல்லாம் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் பட்டியலிட்டனர். பின்னர், நாங்கள் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு விருப்பமா என கேட்டார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார்" என்றார்.

புகார் அளிக்க ராக் மறுத்துவிட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை முன்னதாகவே தெரிவித்திருந்தனர். ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மேடையில் தனது மனைவி குறித்து கேலியாக பேசியதற்கு அமெரிக்க நகைச்சுவை நடிகர் ராக்கை வில் ஸ்மித் அறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் நடைபெற்று அரை மணி நேரத்திலேயே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இருந்த நட்சத்திரங்கள் பலத்த கரகோஷம் எழுப்பிய நிலையில், அவர் விருதை பெற்று கொண்டார்.

முன்னதாக, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்தது. அதில், ராக்கை வில் ஸிம்த் அறைந்த பிறகு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும்படி அவரை கேட்டு கொண்டோம். ஆனால், அவர் மறுத்துவிட்டதாக கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.