தவறான தகவல்களை நீக்கவில்லை எனில் அபராதம்: விக்கிபீடியாவுக்கு ரஷியா மிரட்டல்

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு குறித்து தவறான தகவல்களுக்காக விக்கிபீடியாவுக்கு 4 மில்லியன் ரூபிள் (ரூ.36,50,501.31) அபராதம் விதிக்கப்படும் என ரஷியா மிரட்டல் விடுத்துள்ளது. 
ரஷிய அதிபர் புதின் (கோப்புப்படம்)
ரஷிய அதிபர் புதின் (கோப்புப்படம்)

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு குறித்து தவறான தகவல்களுக்காக விக்கிபீடியாவுக்கு 4 மில்லியன் ரூபிள் (ரூ.36,50,501.31) அபராதம் விதிக்கப்படும் என ரஷியா மிரட்டல் விடுத்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது. எனினும் உலக நாடுகளின் ராணுவ உதவியுடன் உக்ரைனும் எதிர் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து ரஷிய மொழியிலான விக்கிபீடியா பக்கத்தில் தவறான தகவல்களை பதிவிட்டதால் 4 மில்லியன் ரூபிள் (ரூ.36,50,501.31) அபராதம் விதிக்கப்படும் என விக்கிப்பீடியாவிற்கு ரஷியாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் மிரட்டல் விடுத்துள்ளார். 

மேலும், ரஷியாவின் ராணுவ நடவடிக்கை குறித்து விக்கிபீடியாவில் உள்ள தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்  என்று கூறியுள்ளார். 

முன்னதாக கூகுள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரஷியா மிரட்டல் விடுத்திருந்தது. மேலும் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com