மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உக்ரைன் பயணம்

ரஷியப் படையினர் தாக்குதல் தொடரும் நிலையில் போர் நிலவரங்களை அறிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உக்ரைன் செல்ல உள்ளார்.

News image
வெர்சுலா வொன் டார் லெயன்
Updated On :5 ஏப்ரல் 2022, 9:54 am

DIN

ரஷியப் படையினர் தாக்குதல் தொடரும் நிலையில் போர் நிலவரங்களை அறிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உக்ரைன் செல்ல உள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக  தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் ரஷியப்படையினர் உக்ரைன் மக்களையும் தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. 

குறிப்பாக, உக்ரைனின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்ற ரஷியா தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருதால் போரால் பலரும் இயல்பு வாழ்வை இழந்து வருகிறார்கள்.

தலைநகர் கீவ் அருகே புச்சா என்ற பகுதியில் நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட  உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரஷியப்படையினர் செய்தது இனப்படுகொலை என்றும் உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வார இறுதியில் உக்ரைனில் ரஷியா ஏற்படுத்திய சேதங்கள் குறித்தும், போர் நிலவரங்களை அறியவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் வெர்சுலா வொன் டார் லெயன் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா கடந்த வாரம் உக்ரைன் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.