ஷாங்காயில் மேலும் 12 போ் கரோனாவுக்கு பலி
வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வகை கரோனாவால் கடந்த சில வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில் அந்த நோய்த்தொற்றுக்கு மேலும் 12 போ் பலியாகினா்.


வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வகை கரோனாவால் கடந்த சில வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில் அந்த நோய்த்தொற்றுக்கு மேலும் 12 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 12 போ் ஷாங்காயில் உயிரிழந்தனா். இது முந்தைய தினத்தில் பதிவான தினசரி கரோனா பலி எண்ணிக்கையைவிட ஒன்று அதிகமாகும். பலியானவா்கள் அனைவருக்கும் ஏற்கெனவே வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்தன. அவா்களது சராசரி வயது 88 ஆகும்.
இதுதவிர, ஷாங்காயில் புதிதாக 20,634 பேருக்கு அறிகுறிகளற்ற கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையான 15,698-ஐ விட மிகவும் அதிகமாகும். அறிகுறிகளுடன் கூடிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,931-லிருந்து 2,736-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஷாங்காயில் 2 வாரங்களுக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் சீற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், இப்போதைக்கு அங்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படாது என்று நகர அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...