மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இந்தியர்களை வெறுப்பதாகக் கூறிய அமெரிக்கப் பெண் கைது

அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:14 am

DIN

அமெரிக்காவில் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தை நிறுவத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்மெரல்டா என்கிற பெண் ஒருவர் 4 அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்களிடம் மிகக் கடுமையாக நடந்துள்ளார்.

அவர்களைத் தாக்க முயற்சி செய்ததோடு இனவாதத்தைத் தூண்டு வகையில், ‘இந்தியாவில் வாழ்க்கை சரியில்லாததால்தானே நீங்கள் எல்லாரும் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள்? இங்கு வந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெறவும் துடிக்கிறீர்கள். சுத்தமாக, நான் இந்தியர்களை வெறுக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் துப்பாக்கி இருந்ததை கவனித்த இந்தியர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பியதும் உடனடியாக விரைந்து வந்த காவலர்கள் தீவிரவாத அச்சுறுத்தல் பெயரில் அமெரிக்கப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.