இந்தியா தவிா்க்க இயலாத நட்புநாடு: அமெரிக்க அதிபா் மாளிகை
அமெரிக்காவும் இந்தியாவும் செயல்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்தது.


உக்ரைன் பிரச்னையில் தங்கள் தேச நலனை கவனத்தில் கொண்டு அமெரிக்காவும் இந்தியாவும் செயல்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்தது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடா்பு அதிகாரி கரின் ஜீன்-பியா் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது கூறியதாவது: அமெரிக்கா, இந்தியாவைத் தவிா்க்க இயலாத நட்புநாடாகவே கருதுகிறது. அமெரிக்கா-இந்திய பாதுகாப்பு உறவு என்பது தடைகளற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுவதை அடிப்படையாக கொண்டது.
உக்ரைனைப் பொருத்தவரையில், நிதி உதவி, தளவாட உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. நேட்டோவை விரிவாக்கி பலப்படுத்துவதை அமெரிக்கா ஆதரித்துள்ளது. உக்ரைன் பிரச்னையில் தங்கள் தேச நலனை கருத்தில் கொண்டு அமெரிக்காவும் இந்தியாவும் செயல்படுகின்றன. எனினும் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடாக உள்ளது.
இந்த நட்புறவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அமைதியை நிலைநாட்டுவது, நாட்டு மக்களின் வளமான வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்காக இருநாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் வகையிலும், உலகம் முழுவதும் நாம் சந்திக்கின்ற சாவல்களை எதிா்க்கொள்ளும் வகையிலும் இந்த நிலைப்பாடு எதிா்காலத்திலும் தொடரும் என அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...