சென்னை: பாரிஸில் இயங்கி வரும் கிறிஸ்டீ என்ற ஏல மையத்தில், ஏலம் விடப்படுவதாக இருந்த 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோவில்பட்டியில் இருந்து 1972ஆம் ஆண்டு திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை கிறிஸ்டீ ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாநில காவல்துறை மூலம் ஏல மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏலம் தொடர்பாக கிறிஸ்டீ மையம் தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கயத்தாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வர் கோயிலுக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கே. ஜெயந்த் முரளி, ஏல மையத்தை சமூக வலைத்தளம் மூலமாகத் தொடர்பு கொண்டு, தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸில் உள்ள இந்திய தூதர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த வெண்கலச் சிலை, 15 - 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இந்தச் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


