'லேப்டாப்புக்குப் பதிலாக நாய் உணவு' - மன்னிப்புக் கோரிய அமேசான்!

அமேசானில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய்க்கு அளிக்கும் உணவு வந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமேசானில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய்க்கு அளிக்கும் உணவு வந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆன்லைன் வணிகத் தளங்களில் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள்கள் வருவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் வுட்(61) என்பவர் தனது மகளுக்காக அமேசான் தளத்தில் கடந்த நவ. 29 ஆம் தேதி ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள மேக்புக் புரோ லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். அடுத்த நாளே டெலிவரி வரும்படி பணம் செலுத்தியுள்ளார். 

பின்னர் ஆர்டர் வந்த பெட்டியை திறந்து பார்த்தபோது நாய்க்கு அளிக்கக்கூடிய உணவான 'பெடிக்ரீ' 2 பாக்கெட் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நிறுவனம் லேப்டாப்புக்கான பணத்தைத் திருப்பித்தர மறுத்துள்ளது. 

சுமார் 15 மணி நேரம் அமேசான் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் போனில் பேசியதாக ஆலன் வுட் தெரிவிக்கிறார். 

இதன்பின்னர் பொருளை திருப்பி அளிக்கும் வசதியில், லேப்டாப்புக்கு பதில் வந்த நாய் உணவை அமேசானுக்கே திருப்பி அளித்துள்ளார். இதையடுத்து நிறுவன செய்தித் தொடர்பாளர், ஆலன் வுட்டிடம் மன்னிப்பு கேட்டதுடன் பணத்தைத் திரும்பியளிப்பதாகக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com