பாகிஸ்தானின் கராச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உரிய ஆவணங்களின்றி நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் குழந்தைகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பாகிஸ்தான் அரசின் இந்த கைது நடவடிக்கை தெற்கு ஆசியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உள்ள சரியான புரிதலற்ற இருதரப்பு உறவினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அனைவரும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்ப விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு உரிய ஆவணங்களின்றி நாட்டினுள் நுழைபவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருந்தாலும், கடந்த அக்டோபர் முதல் பாகிஸ்தானின் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து உரிய ஆவணங்களின்றி உள்ளே நுழைந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கராச்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரி கூறியதாவது: இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுடனும், உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிக்க: ''பாக்கியலட்சுமி'' தொடரில் மீண்டும் நடிக்கிறார் ரித்திகா
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 139 பெண்கள் மற்றும் 165 குழந்தைகள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது: வி.செந்தில் பாலாஜி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


