மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 667 பேர் இறந்துள்ளனர் என்று அந்நாட்டு கரோனா கண்காணிப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நேற்றைய தொற்று பாதிப்பு 1,41,883 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,55,768 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,22,84,564 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 668 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,33,357 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | போர்ச்சுகலில் கரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்தது
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 17,792 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றைய தொற்று பாதிப்பைவிட 3.4% அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,60,475 ஆகவும், அவர்களில் 2,300 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 53,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,90,732 ஆக அதிகரித்துள்ளது என்று கரோனா கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



