ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீனாவில் பிறப்பு விகிதம் 1 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்தது

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக .

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:00 am

DIN


சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 10 மாகாணங்களில் பிறப்பு விகிதம் 1 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் சீனாவின் பிறப்பு விகிதம் 1,000க்கு 8.52 ஆகவும்வே, இது முதல் முறையாக 10க்கும் குறைவாக இருக்கும், அதே நேரத்தில் பொதுவான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1,000க்கு 1.45 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சீனா தேசிய புள்ளியியல் ஆண்டு புத்தகம் 2021 அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

மேலும் 2020 இல் பொதுவான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட 25 சதவிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவித்திருந்தது. குறிப்பாக, 2016 இல் இரண்டு குழந்தைகள் கொள்கை அமலுக்கு வந்ததில் இருந்து, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1,000க்கு 6.53 இல் இருந்து 1,000க்கு 1.45 ஆகக் குறைந்துள்ளது, 2017 இல் இருந்து இந்த சரிவு அதிகமாக காணப்பட்டது. பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இது 1,000க்கு 13.57 ஆக குறைந்தது. 2016 இல் 1,000க்கு 8.52 ஆக  இருந்தது.

இந்த சரிவு நிலை 2021 மற்றும் அதற்குப் பிறகும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சீன தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில் பிறப்பு இறப்பு குறைந்து 1 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பிறப்பு விகிதம் 1 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், 1970 இல் முற்பகுதியில் தொடங்கிய பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியின் போக்கே தொடர்வதாக தெரிவித்துள்ளது.

மேலும், 20 முதல் 29 வயதுக்குள்பட்ட பெண்களின் மக்கள்தொகை 2010 முதல் 2021 வரை 34.63 மில்லியனாக குறைந்துள்ளது. இது சீனாவின் குறைந்த கருவுறுதல் விகிதம், குழந்தைகளைப் பெற விரும்பும் குறைவான தம்பதிகளால் மட்டுமல்ல, குழந்தை பிறக்கும் வயது பெண்களின் எண்ணிக்கை குறைவையே காட்டுகிறது. 

பிறப்பு விகிதம் 1 சதவிதத்திற்கும் கீழே சரிவது சீனாவின் மக்கள்தொகையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளது. குறைந்த கருவுறுதல் விகிதத்தால் உந்தப்பட்டு, குறைந்து வரும் இளம் மக்கள்தொகை பொருளாதார மந்தநிலையை அதிகரிக்கக் கூடும். மக்கள்தொகை வளர்ச்சி விதிகளின்படி, மக்கள்தொகை வயது கட்டமைப்பில் ஏற்றத்தாழ்வால் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலை ஏற்படக் கூடும்.

2012 முதல், சீனாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன்கள் குறைந்து வருகிறது, இதுவரையிலான மொத்தக் குறைவு 40 மில்லியனைத் தாண்டியுள்ளது. 

சீனாவின் மக்கள்தொகை 2017 இல் 7.37 மில்லியனாகவும், 2018 இல் 5.3 மில்லியனாகவும், 2019 இல் 4.67 மில்லியனாகவும், 2020 இல் 2.04 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது, இவை மக்கள்தொகை வளர்ச்சியின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

இந்த சிக்கலுக்கு காரணம் என்னவென்றால், நாட்டின் வயதான மக்கள் தொகை. மக்கள்தொகை வயது கட்டமைப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, மக்கள்தொகையின் நீண்ட கால, சீரான வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லாமை.

எனவே, ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மக்கள் தொகை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ள வேண்டும்.

உண்மையில், ஒரு சீரான மக்கள்தொகை வயது அமைப்பு மற்றும் ஆரோக்கியமான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க இன்றியமையாதது.

நிலையான வளர்ச்சி மற்றும் தேசிய புத்துணர்ச்சியை அடைவதற்கு கருவுறுதல் நட்பு சமுதாயத்தை உருவாக்குதல் மற்றும் நீண்ட கால சமச்சீர் மக்கள்தொகை வளர்ச்சியின் அவசியத்தை  உணர்ந்துவது, மக்கள்தொகையின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய, சீனா கிட்டத்தட்ட மாற்று கருவுறுதல் விகிதத்தை 1.8-2.5 ஆக பராமரிக்க வேண்டும்.

இருப்பினும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் கருவுறுதல் விகிதத்தில் உள்ள சில வேறுபாடுககளை கலைதல், வலுவான கருவுறுதல் உள்ள தம்பதிகளுக்கு அதிக குழந்தைகளைப் பெறுவதற்கும், சிறுபான்மை இனப் பகுதிகளில், கருவுறுதல் விகிதத்தை ஆரோக்கியமான நிலைக்கு உயர்த்துவதற்கு தேவையான அனைத்து வகையான ஆதரவையும் வழங்குதல், அதிக கருவுறுதல் திறன் கொண்ட குழுக்களை அடையாளம் காணுதல் போன்றவற்றில் அதிகாரிகள் கவனம் செலுத்தி உதவுதல் வேண்டும்.

அதாவது சீனாவிற்கு ஒரு புதிய வகை கருவுறுதல் கலாச்சாரத்தை உருவாக்க ஒரு குடும்ப நட்பு கொள்கை மற்றும் அமைப்பு தேவை, தொடர்புடைய கொள்கைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை பிரதிபலிக்கின்றன மற்றும் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை மக்கள் மதிக்கப்படுவார்கள் என்பதை உறுதிப்படுவார்கள், மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றால் முதலாளிகள் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய தாய்மார்களுக்கு "குழந்தை போனஸ்" மற்றும் நீண்ட மகப்பேறு விடுப்பு வழங்குதல் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சிறப்பாகப் பாதுகாப்பதன் மூலம் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில், சமூக நலச் சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பையும் அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.