திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அச்சுறுத்தும் கரோனா: உலகளவில் பாதிப்பு 31.76 கோடி; பலி 5.53 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31.76 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.53 லட்சத்தை கடந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:07 am

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31.76 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.53 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,76,27,277-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 55,31,118 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 26,28,93,376 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 4,92,02,783 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 95,477 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 6,43,59,409 ஆகவும், பலி எண்ணிக்கை 8,66,891 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,63,17,927-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,85,035 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,27,18,606 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,20,419 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,62,138-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,51,007 ஆக உள்ளது.

பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,34,982 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,26,305 ஆக உள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,02,150 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,18,432 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.