காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க ஒப்புதல்

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க ஒப்புதல்

Updated On :9 ஜூலை 2022, 12:38 pm

DIN

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், நாடாளுமன்ற அவைத்தலைவர் இல்லத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகி, அனைத்துக் கட்சி அரசு பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறியிருக்கிறார்.

இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபட்ச பதவி விலகினால், அந்நாட்டு அரசியல் அமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இலங்கையில், அனைத்துக் கட்சி அரசை அமைக்கவும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.