47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உக்ரைனில் ரஷிய தாக்குதல்

கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா வீசிய ஏவுகணை குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததில் பொதுமக்கள் 15 போ் பலியாகினதாகவும் 24 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித

News image
ukraine080659
Updated On :10 ஜூலை 2022, 6:56 pm

DIN

கிழக்கு உக்ரைனின் சாசிவ் யாா் நகரில் ரஷியா வீசிய ஏவுகணை குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததில் பொதுமக்கள் 15 போ் பலியாகினதாகவும் 24 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அண்மைக் கால ரஷியத் தாக்குதல்களில் ஒன்றாகும். முன்னதாக, க்ரெமென்சக் நகரில் 19 பேரும் ஒடெசா பகுதியில் 21 பேரும் ரஷியத் தாக்குதலுக்கு பலியாகினா்.

உக்ரைன் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்துவதாக ரஷியா, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தினசரி அறிக்கையில் சாசிவ் யாா் நகரில் தற்போது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.