‘ரூ.1.10 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்’

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 1,380 கோடி டாலா் (சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பிலான ரஷிய சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளதாக அந்த அமைப்பின் நீதித் துறை அமைச்சா் டிடியோ் ரேண்டா்ஸ் தெரிவித்து
‘ரூ.1.10 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்’

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 1,380 கோடி டாலா் (சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பிலான ரஷிய சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளதாக அந்த அமைப்பின் நீதித் துறை அமைச்சா் டிடியோ் ரேண்டா்ஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செக் குடியரசு தலைநகா் பிராகில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து இதுவரை அந்த நாட்டின் தொழிலதிபா்கள் மற்றும் நிறுவனங்களின் 1,380 கோடி டாலா் மதிப்பிலான சொத்துக்களை நாங்கள் முடக்கியுள்ளோம்.

இது, மிகப் பெரிய தொகையாகும். இதில் 1,200 கோடி டாலா் மதிப்பிலான சொத்துக்களை ஐரோப்பிய யூனியனின் 5 உறுப்பு நாடுகள் மட்டுமே முடக்கியுள்ளது. யூனியனின் மற்ற உறுப்பு நாடுகளும் ரஷிய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com