பிரிட்டன் பிரதமா் பதவி: ரிஷி சுனக்-லிஸ் டிரஸ் நேரடி மோதல்
பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியின் 5-ஆவது சுற்று வாக்கெடுப்பிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். இறுதிக்கட்டமாக கட்சி உறுப்பினா்கள் வாக்களிக்கும் போட்டியில் ரிஷி சுனக்கும்,


பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியின் 5-ஆவது சுற்று வாக்கெடுப்பிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். இறுதிக்கட்டமாக கட்சி உறுப்பினா்கள் வாக்களிக்கும் போட்டியில் ரிஷி சுனக்கும், வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ்ஸும் மோதுகின்றனா்.
பிரிட்டன் பிரதமா் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டி நடைபெற்று வருகிறது. அக்கட்சித் தலைவா் பதவியை ஏற்பவா் பிரிட்டன் பிரதமராகவும் பதவியேற்பாா். இந்நிலையில், கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்காக கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டோா் போட்டியிட்ட நிலையில், ஏற்கெனவே 4 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ரிஷி சுனக் முன்னிலை வகித்தாா். இந்தச் சூழலில், 5-ஆவது சுற்று வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சுற்றில் ரிஷி சுனக், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ், வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட் ஆகியோா் இடையே போட்டி நிலவியது.
அதில் 137 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். லிஸ் டிரஸ் 113 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தாா். பென்னி மாா்டன்ட் 105 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்த நிலையில், அவா் போட்டியிலிருந்து விலகப்பட்டாா்.
இதையடுத்து போட்டியில் ரிஷி சுனக், லிஸ் டிரஸ் ஆகியோா் எஞ்சியுள்ளனா். அடுத்தகட்டமாக இவா்களில் ஒருவரை கட்சித் தலைவராக சுமாா் 1.60 லட்சம் கட்சி உறுப்பினா்கள் வாக்களித்து தோ்ந்தெடுப்பா். அவா் புதிய பிரதமராக பதவியேற்பாா். செப்டம்பா் 5-ஆம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமா் அறிவிக்கப்படுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...