
உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் இந்த மாதம் திறக்கப்படுவதாகவும் ஆனால், பணியாளர் விரும்பும் பட்சத்தில் அவர் வீட்டிலிருந்து பணிபுரியலாம் என அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலர் பாரக் அகர்வால் தெரிவித்துள்ளார். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பெரும்பாலான அலுவலகங்கள் உலகம் முழுவதும் மூடப்பட்டது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைத்து கொள்ள கூகுள் நிறுவனமும் திட்டமிட்டுவருகிறது. இருப்பினும், வாரம் இரு முறை அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருந்தொற்று காரணமாக தொழில்நுட்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்து பணிபுரியும் முறை அமலாக்கப்பட்டது. இதுகுறித்து பாரக் அகர்வால் ட்விட்டர் பக்கத்தில், "அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் முறை உடனடியாக அமலுக்குவருகிறது. உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் மார்ச் 15ஆம் முதல் திறக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்
எங்கிருந்து பணிபுரிந்தால் ஆக்கபூர்வமாகவும் படைப்பு திறன்மிக்கதாக உணர்கிறீர்களோ அங்கிருந்து பணிபுரியங்கள். அது, முழு நேரமும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையாக இருந்தாலும் சரி" என பதிவிட்டுள்ளார்.
பணியை பகிர்ந்து கொள்வது கடினம் என்பதால் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்புவோர் சூழலுக்கு ஏற்ப பணி செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அலுவலகத்தில் வந்து பணிபுரிவதே துடிப்புமிக்க நிறுவன கலாசாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.