தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை போர்மழை பொழிந்துள்ளது.

News image

மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு

Updated On :11 மார்ச் 2022, 10:25 am


மரியுபோல்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை குண்டு / ஏவுகணை மழை பொழிந்துள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள், மரியுபோல் அருகே ரஷிய படைகள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.  உக்ரைனின் தலைநகர் கீவ் நகரமே இரண்டாகப் பிளக்கப்பட்டு, ஒரு புறம் நகரப் பகுதியும், மற்றொரு பக்கம் வனப்பகுதியாகவும், நடுவில் படைகள் குவிக்கப்பட்டு, எந்நேரமும் கடுமையான தாக்குதலை நடத்த தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

மரியுபோல் பகுதியில் அமைந்திருந்த மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானதற்கு சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த படைக்குவிப்பை ரஷியா நடத்தியுள்ளது.

உக்ரைன் நாடு, மருத்துவமனை மீதான தாக்குதலை போர்க் குற்றம் என்று சாடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.