தென் கொரியாவை அச்சுறுத்தும் கரோனா: புதிய உச்சத்தில் ஒருநாள் பாதிப்பு
தென் கொரியாவில் நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.


தென் கொரியாவில் நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,83,665 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன் அங்கு மொத்தம் 62,06,777 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது,
ஒருநாள் கரோனா பாதிப்பு முந்தைய நாளை விட இன்று அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் மாறுபாடு பரவலின் மத்தியில் சியோல் பெருநகரப் பகுதியில் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது. சியோலில் 80,437 பேரும், ஜியோங்கி மாகாணத்தில் 1,07,941 பேரும், இன்சியானில் 23,735 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் அல்லாத பகுதிகளில் 171,477 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நாளில் 269 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 10,144 ஆக உள்ளது. மொத்த இறப்பு விகிதம் 0.16 சதவீதமாகும்.
மேலும், நாட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,428,431 ஆகும். இது மக்கள்தொகையில் 86.6 சதவீதம் ஆகும்.
பூஸ்டர் டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 32,064,014 ஆகும். இது மக்கள் தொகையில் 62.5 சதவீதம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...