செர்னோபில் அணு உலை வெடிக்க வாய்ப்பு உள்ளது: ரஷியாவிற்கு உக்ரைன் எச்சரிக்கை

செர்னோபில் அணு உலையில் உள்ள வேதிப் பொருள்கள் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால் ரஷியா உடனடியாக படைகளை வெளியேற்ற வேண்டும் என உக்ரைன் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செர்னோபில் அணு உலை
செர்னோபில் அணு உலை

செர்னோபில் அணு உலையில் உள்ள வேதிப் பொருள்கள் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதால் ரஷியா உடனடியாக படைகளை வெளியேற்ற வேண்டும் என உக்ரைன் துணை பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தலைநகர் கீவைக் கைப்பற்ற ரஷியா தொடந்து முயற்சி செய்து வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மரியுபோலில் கடந்த சில நாள்களாக ரஷியப் படையினர் அங்குள்ள பள்ளிகள், மருத்துவமனை மற்றும் பொதுக் கட்டடங்களின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகின்றன. 

இந்தத் தாக்குதல் காரணமாக மரியுபோலில் 210 குழந்தைகள் உள்பட 5,000 பேர் பலியானதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் நடந்த உக்ரைன் - ரஷியா பேச்சுவார்த்தையில் தலைநகர் கீவிலிருந்து படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்நிலையில், செர்னோபில் அணு உலையைச் சுற்றி ரஷியப் படைகள் ஆயுதங்களை வைத்திருப்பதால், தாக்குதலின்போது அணு உலையில் உள்ள வேதிப் பொருள்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ரஷியா படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரஷ்சுக்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com