இந்தியா-இலங்கை உறவு மேம்படும்: ரணில் விக்கிரமசிங்கே
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேலும் சிறப்பாக மாறும் என புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேலும் சிறப்பாக மாறும் என புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை விலகிய நிலையில் இலங்கை பிரதமராக 6 முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.
மேலும் 15 பேர் அடங்கிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பதவியேற்புக்குப் பின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்தியா-இலங்கை உறவு குறித்துக் கேள்வி எழுப்பட்டது. அதற்கு ‘இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேம்படும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் சவாலை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன், அதை நிறைவேற்ற வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...