தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பகுதியில் உள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் கருப்பின மாணவனின் உடைமைகள் மீது வெள்ளையினத்தைச் சேர்ந்த மாணவன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கருப்பின மாணவனின் அறைக்குச் சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த வெள்ளையின மாணவன் அந்த மாணவனின் உடமைகளின் மீது சிறுநீர் கழித்துள்ளான். கருப்பின மாணவர்களை வெள்ளையின மாணவர்கள் இப்படிதான் நடத்துவார்கள் என அந்த மாணவன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் தொலைபேசியில் விடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியானது. இதனையடுத்து, அந்த வெள்ளையின மாணவன் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டான்.
இந்த இனவெறி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
2021 ஆம் கல்வியாண்டில் இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் 54.4 சதவிகிதம் வெள்ளையின மாணவர்கள் மற்றும் 22.5 சதவிகிதம் கருப்பின மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!

தில்லி கேபிடல்ஸுக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்!
பாகிஸ்தானின் விதியை எழுதும் இந்தியா? துரந்தர் ரிவென்ஞ் - திரை விமர்சனம்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்! - ஈரானிய எம்பிக்கள் பரிந்துரை!
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

