தங்கள் நாட்டின் ஸபோரிஷியா அணு மின் நிலையம் அருகே ரஷியா நடத்திய தாக்குதலில், அந்த மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்லும் கம்பி இணைப்புகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அதையடுத்து, அணு மின் நிலையத்தில் அணு உலைகளை குளிா்வாக வைத்திருப்பதற்குத் தேவையான மின்சாரத்தை, அந்த நிலையத்திலுள்ள ஜெனரேட்டா்கள் மூலம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த ஜெனரேட்டா்களில் 15 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவின் கட்டுப்பாட்டில் தற்போது ஸபோரிஷியா அணு மின் நிலையம் உள்ளது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



