அமெரிக்காவைத் தாக்க ஒத்திகை: வட கொரியா

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாகவே தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தாக்க ஒத்திகை: வட கொரியா

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாகவே தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையாக அந்தப் பயிற்சியை வட கொரியா கருதுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க-தென்கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த வாரம் நடைபெற்றது.

அதனைத் கண்டித்து, அதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி வட கொரியா கடந்த புதன்கிழமை சோதித்தது. அதில் ஓா் ஏவுகணை, தென் கொரிய கடலோரப் பகுதியில் விழுந்தது. அதன் பிறகும் தனது 180 விமானங்களை அச்சுறுத்தும் வகையில் பறக்கச் செய்தும், நீண்ட தொலைவு ஏவுகணைகளை வீசியும் வட கொரியா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்காவையும் தென் கொரியாவையும் தாக்குவதற்கான ஒத்திகையாகவே அந்த சோதனைகளை நடத்தியதாகக் கூறி வட கொரியா தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com