நேபாள அதிபர் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உடல் நலக்குறைவு காரணமாக நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). இவர் நேற்று சளி போன்ற அறிகுறிகள் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் காத்மண்டூவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க- பிகாரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை அதிபரின் செயலர் பேஷ் ராஜ் உறுதி செய்துள்ளார்.
பித்யா தேவி பண்டாரி, கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...