ஹாங்காங் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது: ஷி ஜின்பிங்

ஹாங்காங் மீதான முழுமையான கட்டுப்பாட்டை சீனா அடைந்து விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 
ஷி ஜின்பிங்
ஷி ஜின்பிங்

ஹாங்காங் மீதான முழுமையான கட்டுப்பாட்டை சீனா அடைந்து விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

சீனாவில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியக் கூட்டம் பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்று வருகிறது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஐந்து ஆண்டு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் நாட்டின் அடுத்த அதிபர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அதிபருமான ஷி ஜின்பிங் இரண்டு 5 ஆண்டுகள் அதிபராக நீடித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நிரந்தர அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பது குறித்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“சீனா ஹாங்காங்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அடைந்து விட்டது. குழப்பத்தில் இருந்து ஆட்சிக்கு மாற்றியுள்ளது. தைவான் நாட்டின் பிரிவினைவாதிகள் தைவானில் சுதந்திரம் பெற வேண்டுமென கிளர்சியை தூண்டினார்கள். நாங்கள் அந்த பிரிவினைவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.  சீனாவின் இறையாண்மையை காப்பாற்றுவோம். அதே சமயம் தைவானின் சுதந்திரத்தை எதிர்க்கிறோம். 

ஹாங்காங்கில் கொந்தளிப்பான முன்னேற்றங்களை எதிர்கொண்டு, சீனாவின் அரசியலமைப்பு மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதியின் அடிப்படைச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு நிர்வாகப் பகுதியின் ஒட்டுமொத்த அதிகார வரம்பையும் அரசு பயன்படுத்தியது.  

நாங்கள் உலக அளவில் சீனாவின் மரியாதையையும் பாதுகாப்பையும் காப்பாற்றுவோம். மேலும் சீனாவை உலக அளவில் நல்ல நிலைமைக்கு கொண்டு வருவோம். திடீரென ஏற்பட்ட கரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமான பூச்சிய கரோனா திட்டத்தை விடாமுயற்சியுடன் தொடர்ந்து வருகிறோம்” என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலளராக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வாகவும் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிபராகவும் தேர்வு செய்யப்படலாம் என பிராந்திய வல்லுநர்கள் கருத்து தெரிவிகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com